Home கலை உலகம் “வேண்டுமென்றே தான் களஞ்சியம் என்னை அறைந்தார்” – நடிகை ப்ரியங்கா குற்றச்சாட்டு!

“வேண்டுமென்றே தான் களஞ்சியம் என்னை அறைந்தார்” – நடிகை ப்ரியங்கா குற்றச்சாட்டு!

597
0
SHARE
Ad

Director MU.Kalanjiyam.சென்னை, ஜூன் 27 – கடந்த வாரம், ‘கோடை மழை’ படப்பிடிப்பின் போது, இயக்குநர் களஞ்சியத்திடம் கன்னத்தில் அறைவாங்கிய நடிகை ப்ரியங்கா, தற்போது காது பகுதியில் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

தன்னை இயக்குநர் களஞ்சியம் வேண்டுமென்றே அறைந்ததாகவும், மயக்கம் போட்டு விழுந்த தனக்கு படக்குழுவினர் சாப்பாடு கூட வாங்கித் தரவில்லை என்றும் ப்ரியங்கா பிரபல குமுதம் வார இதழுக்கு அளித்த அண்மைய பேட்டியில்  புலம்பி இருக்கிறார்.

மேலும், கதாப்பாத்திரத்தின் அடிப்படையில், தான் கறுப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக படத்தின் இயக்குநர் தன்னை வெயிலில் நிற்க வைத்ததாகவும் பிரியங்கா மனம் நொந்து கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பாலச்சந்தர் காலம் தொட்டு தற்போதைய பாலா காலம் வரை, சோகமான காட்சிகளில் அழுகை வராத கதாநாயகிகளை, அப்படத்தின் இயக்குநர்கள் நிஜமாகவே கன்னத்தில் அறைந்து, அவர்களை அழ வைத்து காட்சிகளை படமாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வழக்கத்தை சாக்காக வைத்து, சில ‘மிருக’ இயக்குநர்கள், படப்பிடிப்பின் போது மிகவும் திமிராக நடந்துகொள்ளும் கதாநாயகிகளின் கன்னத்தை பதம் பார்த்த கதைகளும் உண்டு.