கோலாலம்பூர், ஜூன் 30 – தலைநகர் தேசிய மிருகக் காட்சி சாலையில், சிறப்பு பராமரிப்பில் இருந்து வரும் சீனாவின் இரண்டு பாண்டா கரடிகளை வார இறுதி நாட்களில், ஏராளமான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
குறிப்பாக நிறைய சிறார்கள் பாண்டா கரடிகளை காண தங்கள் பெற்றோருடன் அங்கு வருகின்றனர். இதனால் தேசிய மிருகக் காட்சி சாலை எப்போதும் மக்களால் நிறைந்து காணப்படுகின்றது.
மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான 40 ஆண்டுகால நல்லுறவை கொண்டாடும் விதமாக, சீனாவில் இருந்து இரண்டு பெரிய வகை பாண்டா கரடிகள் விமானம் மூலம் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு கரடிகளும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மலேசியாவிலுள்ள விலங்குகள் சரணாலத்தில் வசிக்கும்.
படங்கள்: EPA