அதன்படி 2012-ஆம் ஆண்டின் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற தமிழ்த்திரைப்பட நடிகராக கடந்த ஆண்டு சூர்யா தேர்வு செய்யப்பட்டிருந்தார். 2013-ஆம் ஆண்டின் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற தமிழ்த்திரைப்பட நடிகர்கள் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.
அதில் ஆர்யாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இவர் கடந்த ஆண்டு 10-ஆவது இடத்தில் இருந்தார். கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த சூர்யாவுக்கு இந்த ஆண்டு இரண்டாவது இடமே கிடைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு (2012 ஆண்டுக்கானது) பட்டியலில் 4 ஆவது இடத்தில் இருந்த அஜித் தற்போது (2013 ஆண்டுக்கானது) 3 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த ஆண்டு பட்டியலில் 5-ஆவது இடத்தில் இருந்த தனுஷ் தற்போது 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த தர வரிசையில் விஜய்க்குத்தான் கடுமையான சரிவு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த விஜய் தற்போது 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்பட்டவருக்கு ஏற்பட்ட நிலைமையைப்பாத்தீங்களா?.