Home இந்தியா டுவிட்டரில் இணைகிறார் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி!

டுவிட்டரில் இணைகிறார் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி!

598
0
SHARE
Ad

biranapபுதுடில்லி, ஜூலை 1 – இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி இன்று டுவிட்டரில் இணைகிறார். இந்திய அதிபராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ய இருக்கிறார் அவர்.

இந்நிலையில் அவர் டுவிட்டரிலும் இணைகிறார். ஏற்கெனவே அவர் சமூக வலைதளமான முகப்பக்கத்தில் இணைந்ததில் அவருக்கு 5.4 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

டுவிட்டரில் இணையும் முதல் இந்திய அதிபர். இதற்கிடையே, டிவிட்டர் ஆதரவாளர்கள் எண்ணிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வெள்ளை மாளிகையை பின்னுக்கு தள்ளி முன்னேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

முதல் இடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இரண்டாவது இடத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சும், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.