கடந்த 2008-ம் ஆண்டு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி காரணமாக மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளான சிட்டி குழுமம், தனது முதலீட்டாளர்களிடம் போலியான அடமான பத்திரங்கள் மூலம் பல பில்லியன் டாலர்கள் பெற்றதாகக் கூறப்படுகின்றது. இந்த விவகாரத்தில் அமெரிக்க நீதித் துறையின் கடும் நெருக்கடி காரணமாக, இந்த இழப்பீடு தொகையை அந்நிறுவனம் செலுத்துவதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், அந்நிறுவனம் அமெரிக்காவின் மத்திய நிதித் துறை அதிகாரிகளால், இவ்விவகாரத்தில் பல்வேறு கட்ட விசாரணைகளை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.இந்த விவகாரம் பற்றி சிட்டி குழுமும் எவ்வித தகவல்களையும் வெளியிட வில்லை.
இந்நிலையில், அமெரிக்க நிதி துறை வட்டாரங்கள் இது பற்றி கூறுகையில், “முதலில் சிட்டி குழுமும் 3 பில்லியன் டாலர்கள் மட்டுமே இழப்பீடகக் கொடுக்க முன் வந்தது. எனினும், அமெரிக்க அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பீடாக கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது” என்று கூறியுள்ளது.