குஷ்பு, ஜோதிகா, தேவயானி, சோனியா அகர்வால்,ரோஜா போன்ற வட இந்திய நடிகைகளும், அமலாபால், நந்தனா உள்ளிட்ட மலையாள நடிகைகளும் சிலர், தமிழ்நாட்டிற்கு வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு தமிழ்நாட்டிற்கு மருமகள்களாகவும் மாறிவிட்டனர்.
சினிமாவில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் இதுபோல தமிழ்நாட்டிற்கு மருமகள்கள் ஆன நடிகைகள் பலர் இருக்கின்றனர்.
90-களில் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை குஷ்பு. தமிழக ரசிகர்கள் முதன்முதலாக கோவில் கட்டும் அளவிற்கு போனது குஷ்புவிற்குத்தான். தமிழக இயக்குநர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளாகிவிட்டார்.
90 களில் கவர்ச்சியான சிரிப்பால் தமிழக ரசிகர்களைக் கவர்ந்த இந்த ஆந்திரதேசத்து நடிகை, தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வமணியை காதலித்து கரம் பிடித்து தமிழகத்தின் மருமகளானார்.
மும்பை வரவான ஜோதிகா, தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாத நடிகையாக பத்தாண்டுகள் வரை நடித்தார். தன்னுடன் நட்பாக இருந்த சூர்யாவை காதலித்து மணந்து கொண்டு சிவகுமார் வீட்டு மருமகளாக சென்னையில் குடியேரிவிட்டார்.
மும்பையில் இருந்து தமிழ்பேசத் தெரியாமல் சின்னப் பெண்ணாக வந்த தேவயானியை விரட்டி விரட்டி காதலித்து வீட்டை எதிர்த்து கரம்பிடித்தார் இயக்குநர் ராஜகுமாரன்.
இப்போது நடிகை அமலாபால் தமிழகத்து இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து கரம்பிடித்து தமிழ் வீட்டுப் பெண்ணாகிவிட்டார்.
தமிழ்நாட்டு ரசிகர்கள் பிற மாநில நடிகைகளுக்கு தங்களின் மனதில் இடம் கொடுக்கின்றனர். அதேசமயம் தமிழக இயக்குநர்களும், நடிகர்களும், தங்களின் படங்களில் வாய்ப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாது வாழ்க்கையிலும் இணைந்து மருமகள்களாக தமிழ்நாட்டிலேயே தங்கவைத்துவிடுகின்றனர்.