சாவ் பாலோ, ஜூலை 10 – மேலே நீங்கள் காண்பது உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளை முன்னிட்டு நெதர்லாந்து நாட்டில் வெளியிடப்பட்டிருக்கும் சிறப்பு நாணயங்கள்.
நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் கோல் அடித்த நெதர்லாந்து குழுவின் தலைமை விளையாட்டாளர் (கேப்டன்) ராபின் வான் பெர்சியின் தோற்றத்தைக் கொண்டு 6,000 எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்ட இந்த சிறப்பு நாணயங்கள், ஏறத்தாழ 80 சதவீதம் விற்றுத் தீர்ந்து விட்டன.
நெதர்லாந்து குழு கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று நேற்று நடைபெற்ற அர்ஜெண்டினாவுடனான அரை இறுதி ஆட்டத்தில் நுழைவதைத் தொடர்ந்து இந்த சிறப்பு நாணயங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ராயல் டச் கொய்ன் எனப்படும் நெதர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ நாணய தயாரிப்பு மையம் இந்த சிறப்பு நாணயங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.