Home தொழில் நுட்பம் சிறப்பான மாற்றங்களுடன் ஐபாட்களுக்கான மைக்ரோசாஃப்ட் ஆபிஸ்!

சிறப்பான மாற்றங்களுடன் ஐபாட்களுக்கான மைக்ரோசாஃப்ட் ஆபிஸ்!

768
0
SHARE
Ad

office_ipad_mini_wood_heroகோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஐபாட்களுக்கான ‘மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்’ (Microsoft Office) பயன்பாடுகளின் தொகுப்புகளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுப்பித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட இந்த ஆபிஸ் செயலிகளில் பயனர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் பல புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஐபாட்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்திய ஆபிஸ் பயன்பாடுகள் இதுவரை 35 மில்லியன் முறை பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘ப்ரீவேர்’ (Free Ware)-ஆக வெளிவந்துள்ள இந்த ஆபிஸ் செயலிகளின் முழுசெயல்பாடுகளையும் பெற பயனர்கள் ‘ஆபிஸ் 365’ (Office 365)-ஐ பணம் செலுத்திப் பெறவேண்டியது அவசியமாகும்.

#TamilSchoolmychoice

ஐபாட்களுக்கான ஆபிஸில் வெளியாகி உள்ள புதிய மேம்பாடுகளில் பல சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மைக்ரோசாஃப்ட் வேர்டில் ‘மூன்றாம் தரப்பு எழுத்துருக்கள்’ (Third-Party Fonts)-ஐ பயன்படுத்துதல், ஆபிஸ் கோப்புகளை ‘பிடிஎஃப்’ (PDF)-களாக மாற்றுதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், முற்றிலும் புதியதாக ‘பிக்சர் டூல்’ (Picture Tool) என்ற புதிய மெனு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான படங்களை வேர்டில் பதிவேற்றம் செய்யவும், மாற்றங்களை ஏற்படுத்தவும் முடியும்.

எக்சல் 1.1-ல் உள்ள தரவுகளை எந்த திசையில் இருந்தும் எளிதாகவும், துரிதமாகவும் தேர்ந்தெடுப்பதற்காக புதிய குறிப்பான் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல், ஆபிஸ்-ன் முக்கிய பயன்பாடான பவர் பாய்ன்ட்-ல் விளக்கக்காட்சிகளை சிறப்பானதாக மாற்ற ‘ப்ளே மீடியா ஃபங்கசன்’ (Play Media Function) என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பவர் பாய்ன்ட் பதிவுகளில் ஒலி ஒளிக் கோப்புகளை இணைப்பதும், ஐபாட் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை புதிய விளக்கக்காட்சிகளில் பதிவேற்றம் செய்யவதும் சாத்தியமாகின்றது.

ஐபாட்களுக்கான ஆபிஸ் செயல்பாடுகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் இதன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.