இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். நேபாள நாடாளுமன்றத்தில் பேசும் இரண்டாவது வெளிநாட்டுத் தலைவர் மோடி. இதற்கு முன்பு 1990ல் அப்போதைய ஜெர்மனி அதிபர் ஹெல்மட் கோல் பேசினார்.
தனது உரையில் மோடி கூறியதாவது, “நேபாளத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.6,000 கோடியிலான சலுகை ஒதுக்கீட்டு கடன் வசதி அளிக்கப்படும்.
மேலும், “அவ்வப்போது எடுக்கப்படும் தொகைக்கு மட்டும் மிகவும் குறைந்த வட்டி செலுத்தினால் போதும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லையானது தடையாக இருக்கக் கூடாது. அது பாலமாக இருக்க வேண்டும்.
இந்தியாவும், நேபாளமும் பாரம்பரியாக மிகச் சிறந்த உறவு கொண்டுள்ளது. இமாலயா, கங்கையைப் போல நீண்டகால உறவு நம்மிடையே உள்ளது. நேபாளத்தில் புதிதாக ஜனநாயக அரசு அமைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.
இந்திய ராணுவத்தில் கூர்கா வீரர்களின் பங்களிப்பு பாராட்டக் கூடியதாகும். “இங்கு பேசும் வாய்ப்பு கிடைத்ததை, இந்தியாவின் 120 கோடி மக்களுக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன்” என்றார் மோடி.