Home இந்தியா நேபாளத்துக்கு ரூ.6000 கோடி சலுகை ஒதுக்கீட்டு கடன்: பிரதமர் மோடி அறிவிப்பு!

நேபாளத்துக்கு ரூ.6000 கோடி சலுகை ஒதுக்கீட்டு கடன்: பிரதமர் மோடி அறிவிப்பு!

746
0
SHARE
Ad

Indian prime minister in Nepal for rare diplomatic visitகாத்மாண்டு, ஆகஸ்ட் 4 – நேபாளத்தில் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்காக ரூ.6,000 கோடி  சலுகை ஒதுக்கீட்டு கடன் வசதியை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று  அறிவித்தார்.

இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள மோடி, அந்நாட்டு  நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். நேபாள நாடாளுமன்றத்தில் பேசும்  இரண்டாவது வெளிநாட்டுத் தலைவர் மோடி. இதற்கு முன்பு 1990ல் அப்போதைய  ஜெர்மனி அதிபர் ஹெல்மட் கோல் பேசினார்.

தனது உரையில் மோடி கூறியதாவது,  “நேபாளத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.6,000 கோடியிலான  சலுகை ஒதுக்கீட்டு கடன் வசதி அளிக்கப்படும்.

#TamilSchoolmychoice

Indian Prime Minister Narendra Modi visits Nepalஇதற்கு முன்பு இந்தியா அளித்துள்ள  ரூ.1,600 கோடி ஒதுக்கீட்டு கடன் இதில் சேராது என்றும், அதன்படி இந்தியாவில் உள்ள வங்கியில்  இருந்து இந்த தொகைக்கான கடனை தனக்கு தேவையான நேரத்தில் அவ்வப்போது  நேபாளம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

மேலும், “அவ்வப்போது எடுக்கப்படும் தொகைக்கு மட்டும் மிகவும் குறைந்த வட்டி  செலுத்தினால் போதும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லையானது தடையாக  இருக்கக் கூடாது. அது பாலமாக இருக்க வேண்டும்.

இந்தியாவும், நேபாளமும்  பாரம்பரியாக மிகச் சிறந்த உறவு கொண்டுள்ளது. இமாலயா, கங்கையைப் போல  நீண்டகால உறவு நம்மிடையே உள்ளது. நேபாளத்தில் புதிதாக ஜனநாயக அரசு அமைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை  பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.

Indian prime minister in Nepal for rare diplomatic visitஉள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகக் கருதாமல்,  எங்களுக்கு உள்ள அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய ராணுவத்தில் கூர்கா வீரர்களின் பங்களிப்பு பாராட்டக் கூடியதாகும். “இங்கு பேசும் வாய்ப்பு கிடைத்ததை,  இந்தியாவின் 120 கோடி மக்களுக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன்” என்றார் மோடி.