இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்க வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு விழா மலேசிய நேரப்படி காலை 4.00 மணிக்கு தொடங்குகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஹம்ப்டன் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி காண்பிக்க உள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15 தங்கம் உட்பட 64 பதக்கங்களுடன், பதக்கபட்டியலில் 5-வது இடத்தில் நீடிக்கிறது. பதக்கப்பட்டியலில் 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம் என 174 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.
போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து 19 தங்கப் பதக்கங்களுடன் 53 பதக்கங்களை கைப்பற்றி 4-வது இடத்தில் உள்ளது. 6 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் மலேசியா 12-வது இடத்தில் உள்ளது.