Home இந்தியா காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கணைகளுக்கு தலா 50 லட்சம் பரிசு – ஜெயலலிதா!

காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கணைகளுக்கு தலா 50 லட்சம் பரிசு – ஜெயலலிதா!

653
0
SHARE
Ad

glasgow2014சென்னை, ஆகஸ்ட் 4 – காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தீபிகா பல்லிக்கல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றனர்.

இந்த இருவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து தலா ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் தனித்தனியே வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அந்த பாராட்டு கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

#TamilSchoolmychoice

“காமன்வெல்த் போட்டின் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது உங்களது விளையாட்டு வாழ்க்கையில் மேலும் ஒரு சிறப்பான வெற்றியாகும்.

இப்போட்டியில் முதல் முறையாக இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் நீங்கள் இருவரும் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள்.

எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைத்து தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் புகழ் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”

என இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

jayalalithaaகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர்கள் அமல்ராஜ், சரத் கமல் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றனர்.

பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் எதிர்காலத்தில் இந்தியா சார்பிலும், தமிழ்நாடு சார்பிலும் பல்வேறு வெற்றிகளை பெறவும் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.