வாஷிங்டன், ஆகஸ்ட் 4 – காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் மனித நேயமற்ற தாக்குதலுக்கு துணை புரியும் விதமாக அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்து வருவதை நிறுத்த வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கானோர் அமெரிக்க அதிபர் மாளிகை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர்.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகில் எங்கு போர் பதற்றம் நிகழ்ந்தாலும் கடுமையாக கண்டனம் தேர்வுக்கும் அமெரிக்கா, காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் விதமாக தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகளைச் செய்து வருகின்றது.
இதனை எதிர்த்து மக்கள் வெள்ளை மாளிகை அருகே பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர் கூறுகையில், “எங்களின் வரி பணம் முழுவதும் அப்பாவி மக்களை கொள்ள பயன்படுவது எற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேலுக்கு உதவி வருவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு தொடர் ஆதரவும், உதவிகளையும் செய்து வரும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், காசா எல்லையில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்க பாதைகள் மற்றும் கண்காணிப்புக் கோபுரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.