Home கலை உலகம் சித்தார்த்துடன் சண்டையிட்டு கவர்ச்சிக்கு மாறினார் சமந்தா!

சித்தார்த்துடன் சண்டையிட்டு கவர்ச்சிக்கு மாறினார் சமந்தா!

938
0
SHARE
Ad

Samantha (2)சென்னை, ஆகஸ்ட் 4 – படு கவர்ச்சியாக நடிக்க தயாராகிவிட்டார் சமந்தா. அதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. பாணா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ உள்பட தமிழ் மற்றும் ஆரம்ப கால தெலுங்கு படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார் சமந்தா.

தற்போது சக கதாநாயகிகள் போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கு துணிந்து விட்டார். எவ்வளவு ஆடை குறைப்பு செய்கிறாரோ அதற்கு ஏற்ப சம்பளமும் கணிசமாக உயர்கிறதாம். அஞ்சான் படத்தில் தொப்புள் பளபளக்க சூர்யாவுடன் கவர்ச்சி ஆட்டம்போட்டு அசத்தியவர் இவர்.

சமீபகாலமாக விழாக்களில் பங்கேற்கும்போதும் தூக்கலான ஆடையில் வந்து இளசுகளை கிறங்கடிக்கிறார். ஆடை குறைத்து நடிக்க ஒப்புக்கொள்வது சம்பளத்தை உயர்த்தவே என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

#TamilSchoolmychoice

samanthaதெலுங்கில் நடிக்கும் “அல்லுடு சீனு” படத்தில் படுகவர்ச்சியாக சமந்தா நடிப்பதற்கு அதிகபட்ச சம்பளம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அத்துடன் முதல் இடத்தை பிடிக்கும் சூட்சமும் இதில் அடங்கி இருக்கிறதாம்.

அதே சமயம் சித்தார்த்துடன் அவருக்கு சண்டை என பேசப்படுகிறது. காதல் முறிவு காரணமாக, கவர்ச்சியாக நடித்து சினிமாவில் தொடர்ந்து நீடிக்க சமந்தா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.