Home வாழ் நலம் இரும்புச்சத்தை அதிகரிக்கும் உருளைக்கிழங்கு!

இரும்புச்சத்தை அதிகரிக்கும் உருளைக்கிழங்கு!

1415
0
SHARE
Ad

potatoஆகஸ்ட் 4 – உருளைக்கிழங்கை சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும். உடல் மிகவும் பெருத்து விடும் என்றெல்லாம் சொல்லி உங்களை பலரும் பயமுறுத்துவார்கள். இக்கூற்று உண்மைதானா? என்று ஆராய்ந்து பார்த்தால் துளி கூட உண்மையில்லை என்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்களின் உணவில் உருளைக் கிழங்கு இருந்திருக்கிறது. உலகத்தில் பஞ்சம், பசி ஏற்பட்டபோதெல்லாம் கை கொடுக்கும் தெய்வமாக இருந்து உருளைக்கிழங்கு காப்பாற்றி இருக்கிறது.

potatoesஉலக அளவில் அரிசி, கோதுமைக்கு பிறகு அதிகம் பயிரிடப்படுவது உருளைக்கிழங்குதான்.  உருளைக்கிழங்கு உயர்தரமான சத்துணவு கொண்ட காய்கறியாகும்.

#TamilSchoolmychoice

100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 கிராம் ஆகும். இதில் புரதம் 16 சதவீதம் உள்ளது. பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவையும் போதிய அளவில் உள்ளன.

potato_png2398வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான சுண்ணாம்புச்சத்து இதில் ஏராளமாக உள்ளன. உருளைக்கிழங்கு எளிதில் செரிக்கும் தன்மை உடையது.

வயதானவர்களுக்கு தேவையான புரதம், மாவுப்பொருட்கள், சர்க்கரை, சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம் போன்ற அனைத்தும் உருளைக்கிழங்கில் கிடைத்து விடுகிறது. உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால்தான் சத்துக்கள் கிடைப்பதுடன், எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

potato_png2391தாய்லாந்தில் உருளைக்கிழங்கு சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சில காய்கறிகளிலும், சில வகை கிழங்குகளிலும், சில வகை கீரைகளிலும், சில வகை பருப்புகளிலும் வாயு இருக்கத்தான் செய்கிறது.

அதற்காக நாம் அதை சாப்பிடாமல் இருக்கிறோமா? சாப்பிடுகிறோம். எனவே உருளைக்கிழங்கை அளவோடு சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுடைய எடைகூடாது. அதனால், எந்த பயமும் இல்லாமல் உருளை கிழங்கை சாப்பிட்டு சந்தோஷமாக வாழுங்கள்.