இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இது வரை பல்லாயிரக் கணக்கானோர் மாயமானதாக புகார் எழுப்பப்பட்டது.
இது குறித்து உலக நாடுகளின் நிர்பந்தத்திற்கு இணங்க இலங்கை அரசு, பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்மாண்டே டிசில்வா, ஜியாஃப்ரீ நைஸ், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கிரேன் ஆகிய மூன்று பேர் அடங்கிய சர்வதேச ஆலோசனைக் குழு ஒன்றை கடந்த மாதம் அமைத்திருந்தது.
இந்நிலையில், இக்குழுவில் மேலும் 3 சர்வதேச நிபுணர்களை நியமிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போர் குறித்து உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக பெரும் வலைகளை விரித்துள்ளன. சர்வதேச நிபுணர்களை அமைக்கும் ராஜபக்சேவின் இந்த செயல் “தான் தோன்றித் தனமானது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ராஜபக்சே அமைத்துள்ள சர்வதேச நிபுணர்கள் அடங்கிய விசாரணைக் குழுவின் மூலம் எந்தவொரு ஞாயமான நீதியும் கிடைக்காது என ஈழத் தமிழர்களால் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.