Home இந்தியா சுதந்திர தின விழாவில் நரேந்திர மோடியை கொல்ல திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!

சுதந்திர தின விழாவில் நரேந்திர மோடியை கொல்ல திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!

495
0
SHARE
Ad

Narendra_Modiடெல்லி, ஆகஸ்ட் 6 – டெல்லியில் சுதந்திர தின விழாவில் உரையாற்றவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியைத் கொல்லவும், விழாவைச் சீர்குலைக்கவும் சதி நடப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சுதந்திர தின விழா நடைபெறும் பகுதியில் 200 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 10,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

red fortசெங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடையாள அட்டைகளைச் சரிபார்த்த காவல் துறையினர், சுதந்திர தின விழா நடைபெறும் பகுதியை நோக்கி இருக்கும் ஜன்னல்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

Narendra-Modiவிழா நடைபெறும் முன் இந்த ஜன்னல்களைத் தடுப்புகள் வைத்து மூடப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய பிரதமருக்கும் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் சுதந்திர தின விழாவின் போது பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.