Home உலகம் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவிற்கு கடும் பாதிப்பு – அமெரிக்கா எச்சரிக்கை! 

பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவிற்கு கடும் பாதிப்பு – அமெரிக்கா எச்சரிக்கை! 

495
0
SHARE
Ad

flag+of+brazilவாஷிங்டன், ஆகஸ்ட் 6 – உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அந்நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளின் காரணமாக ரஷ்யா விரைவில் கடும் சரிவை சந்திக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறியதாவது:- “ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை, அந்நாட்டின் பொருளாதார நிலைப்புத் தன்மையை பெரிதும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

இதனை அந்நாட்டின் பொருளாதாரப் புள்ளிவிவரங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்”. “ரஷ்யாவின் மத்திய வங்கி, கோடிக்கணக்கான டாலர்களை செலவழித்து, அந்நாட்டின் பண மதிப்பை சரியாக விடாமல் இருக்க முயற்சி செய்து வருகின்றது”.

#TamilSchoolmychoice

russia-us-flags“ரஷ்யாவிலிருந்து முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறிவருகின்றன. அதேவேளையில், அந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனினும் ரஷ்யா, உக்ரைன் எதிர்பாளர்களுக்கு தொடர் உதவிகளை செய்து வருகின்றது” என்று தெரிவித்துள்ளார். ரஷ்யா, பொருளாதாரத்தில் கடும் சரிவை நோக்கி செல்வதாக அமெரிக்கா தெரிவித்திருந்தாலும், நடுநிலையாளர்கள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கே பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறுகின்றனர்.