பாலி, ஆகஸ்ட் 6 – இந்தோனேசியாவின் பாலி தீவில் அண்மையில் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பல வகையான கண்ணை கவரும் பட்டங்கள் விடப்பட்டன.
இந்த விழாவில் அந்நாட்டு மக்கள் பலர் கலந்து கொண்டு பெரிய அளவில், பல வடிவங்களில் பட்டங்களை வடிவமைத்து காற்றில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.இக்காட்சிகள் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது.
இந்து சமயத்தின் முதன்மை கடவுளான சிவபெருமானின் பட்டம் காண்பவரின் மனதை கொள்ளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறையை மேலும் வளப்படுத்தும் நோக்கத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: EPA