டென்பசார் – மௌண்ட் அகுங் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாகக் கடந்த 3 நாட்களாக மூடப்பட்டிருந்த இந்தோனிசியாவின் பாலி அனைத்துலக விமான நிலையம் இன்று புதன்கிழமை மதியம் மீண்டும் திறக்கப்பட்டது.
புகைமூட்டத்தின் திசை வேறு பக்கம் மாறியதையடுத்து, விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.
மூன்று நாட்களாக விமான நிலையம் மூடப்பட்டு இருந்ததால், சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் பாலி நகரத்திலேயே தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.