Home நாடு ரவாங் பைபாஸ் திறக்கப்பட்டது- வாகனமோட்டிகள் மகிழ்ச்சி!

ரவாங் பைபாஸ் திறக்கப்பட்டது- வாகனமோட்டிகள் மகிழ்ச்சி!

1004
0
SHARE
Ad

RawangBypass BERNAMAகோலாலம்பூர் – ரவாங் பைபாஸ் (புறவழிச்சாலை) இன்று புதன்கிழமை காலை 6 மணி முதல் வாகனமோட்டிகளுக்குத் திறந்துவிடப்பட்டது.

இதன் மூலம் தினமும் 30,000 வாகனமோட்டிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை, பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தப் புதிய 9 கிலோமீட்டர் பாதை, செரண்டாவிலிருந்து செலாயாங் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை 50 விழுக்காடு குறைக்கும். இதற்கு முன், போக்குவரத்து நெரிசலான நேரங்களில், இதே பாதையைக் கடக்க, வாகமோட்டிகள் கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது 30 நிமிடங்களில் அடைந்துவிடலாம்” என்று தெரிவித்தார்.