Home One Line P1 “மோகனம்பாளை தேடும் பணி தொடர்கிறது!”- சிலாங்கூர் காவல் துறை

“மோகனம்பாளை தேடும் பணி தொடர்கிறது!”- சிலாங்கூர் காவல் துறை

742
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மெயில்

கோலாலம்பூர்: ரவாங்கில் உள்ள பத்து ஆராங்கில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரின் மனைவியான ஜி.மோகனம்பாளைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் நோர் அஸாம் ஜாமாலுடின் தெரிவித்தார்.

35 வயதுடைய அப்பெண்மணி காணாமல் போயுள்ளதாக சிலாங்கூர் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்த தகவல் உள்ளவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அதனை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, ரவாங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை நோர் அஸாம் உறுதிப்படுத்தினார். மேலும், அவர்கள் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கூற்றினை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

காவல் துறையினரால் துரத்தப்பட்ட வோக்ஸ்வாகன் போலோ காரில் மோகனம்பாள் இல்லாததை நோர் தெளிவுப்படுத்தினார்.