காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் ஆண்டுக் கூட்டத்தில் முத்து நெடுமாறனின் உரை காலை 9.00 மணி தொடங்கி, 11.00 மணி வரை இடம் பெறும்.
“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” எனும் தலைப்பில் முத்து நெடுமாறன் உரையாற்றவிருக்கின்றார்.
தேதி : 27.09.2019 (வெள்ளி)
இடம் : தாமான் நேசா, ஸ்கூடாய், ஜொகூர். (BZZ HOTEL)
நேரம் : காலை மணி 9.00 முதல் 1.00 வரை.
ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் உறுப்பினர்கள் மட்டுமின்றி
மற்ற ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினால் கீழ்க்காணும் எண்ணுடன் தொடர்பு கொள்ளும்படி ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் தலைவர் அரா.பாஸ்கரன் கேட்டுக் கொண்டுள்ளார்.