Home One Line P1 மூவர் சுட்டுக் கொலை: சுட்டுக் கொல்லும் நோக்கம் இல்லையென்றால், ஏன் காலில் சுடவில்லை?

மூவர் சுட்டுக் கொலை: சுட்டுக் கொல்லும் நோக்கம் இல்லையென்றால், ஏன் காலில் சுடவில்லை?

1035
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேர் மீதான துப்பாக்கிச் சூட்டின் காயங்கள், அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் முரணாக உள்ளது என்று வழக்கறிஞர் பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் மற்றும் காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் ஆகியோருக்கான கடிதத்தில், மூவரும் மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டதாக இறப்புச் சான்றிதழ் தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களில் ஒருவரான தவசெல்வம் முகத்திலும் சுடப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

காவல்துறையினர்கொலை செய்யும் நோக்கில் சுடவில்லைஎன்றால் ஏன் காலில் எந்தவொரு துப்பாக்கி சூட்டுகான அறிகுறிகளும் இல்லை என்று தனது வாடிக்கையாளர் கேள்வி எழுப்புவதாக அவர் கூறினார்.

கூடுதலாக, தவசெல்வனின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது கை உடைந்து, பற்களில் ஒன்றும் உடைந்துள்ளது. தவசெல்வனின் மனைவி அவரது உடலை பரிசோதித்த பின்னர் இதனை தெரிவித்தார்,” என்று அவர் கூறினார்.

எனவே, இறந்தவரின் உடலில் காணப்பட்ட காயங்களை மொகிதின் மற்றும் ஹாமிட் விளக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் அணுகும் வகையில் தனது வாடிக்கையாளரின் கோரிக்கைக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உதயகுமார் கூறினார்.

இதில் காவல் துரையினரின் டாஷ்போர்டு கேமரா பதிவுகள், முதல் புகார் அறிக்கைகள், சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினரின் சாட்சி அறிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஆவணத்தில் திருத்தம் செய்யப்படும் அபாயம் இருப்பதால் காவல் துறையினர் அவர்களுக்கு அணுகலை வழங்க வேண்டும் என்று உதயகுமார் கூறினார்.

கடந்த செப்டம்பர் 14-ஆம் ரவாங்கில் தவசெல்வம், ஜனார்த்தனன் மற்றும் எஸ்.மகேந்திரன் ஆகியோர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.