Home கலை உலகம் “ஜிகர்தண்டா” ஜில் ஜில் வசூல் – 3 நாட்களில் 7 கோடி!

“ஜிகர்தண்டா” ஜில் ஜில் வசூல் – 3 நாட்களில் 7 கோடி!

522
0
SHARE
Ad

jikarசென்னை, ஆகஸ்ட் 6 – மதுரையில் பெயர்போன பானமான “ஜிகர்தண்டா” என்ற பெயருடன் சித்தார்த் நடிப்பில் வெளிவந்துள்ள படமானது, வசூலில் பட்டையைக் கிளப்பி வருகின்றது.

ஆகஸ்ட் முதல் நாளன்று சித்தார்த், லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஜிகர்தண்டா”. தாமதம், சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம்தான் இப்போது முதல் படமாக உள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. முதல் மூன்று நாட்களிலேயே வசூல் 7 கோடியைத் (மலேசிய ரிங்கிட் 38,40,00,0) தொட்டுள்ளது. இதுகுறித்து சித்தார்த் தன்னுடைய மகிழ்ச்சியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

Samantha (4)நடிகை சமந்தா, தன்னுடைய டுவிட்டரில், “ஜிகர்தண்டா பட குழுவினருக்கு மிக மிக அதிக மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சித்தார்த் ஆகியோருக்கும் எனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.

படம் நன்றாக ஓடுகிறது என கேள்விப்பட்டேன். அருமையான உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் சமந்தா.

KUSHBOO_110991gகுஷ்பு கூறியதாவது, “ஜிகர்தண்டா என்ற மந்திர வார்த்தைக்குள்ளேயே இன்னும் சுழன்று கொண்டிருக்கிறேன். அந்த படம் குறித்து காலை முதலே பேசி கொண்டு இருந்தேன். இன்னும் நிறுத்தவில்லை. நடிகர் சித்தார்த்தால் வெகு அரிதாக இது நடந்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Untitled-42இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் “பீட்ஸா” படத்தின் மூலம்தான் அறிமுகமானார். ஆனால் அவர் முதலில் எழுதிய கதை இந்த மதுரைப் பின்னணி கொண்ட கதைதானாம். காரணம், அவர் அடிப்படையில் மதுரைக்காரர் என்பதால்.

இருப்பினும் முதலில் பீட்ஸாவைக் கொடுத்த அவர் தற்போது தனது மண்ணின் ஜிகர்தண்டாவை ஜில் ஜில்லென்று கொடுத்து, வசூலை அள்ளிக் எடுத்துள்ளார்.