Home கலை உலகம் இந்தி மொழியில் படமாக்கப்படுகிறது ‘ஜிகர்தண்டா’!

இந்தி மொழியில் படமாக்கப்படுகிறது ‘ஜிகர்தண்டா’!

491
0
SHARE
Ad

mani-ratnam-lauds-jigarthandaபுதுடெல்லி, மே 19 – கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், அம்பிகா , கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் மதுரையை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஜிகர்தண்டா’. படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.

கலவையான விமர்சனங்களுக்கு இடையில் வெற்றிபெற்ற படமான இதில் பாபி சிம்ஹாவின் ‘அசால்ட் சேது’ எனும் கதாப்பாத்திரம் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.  இந்நிலையில் பாபி சிம்ஹாவின் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்து.

இந்நிலையில் தமிழில் வித்யாசமான கதைக்களம் என்ற ரீதியில் வெற்றி படங்களை பாலிவுட் தரப்பு  மீண்டும் மறுபதிப்பகம் செய்வது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ’ரமணா’ படத்தின் இந்தி பதிப்பாக வெளியான ’கப்பர் ஈஸ் பேக்’ படம் கூட அதற்கு சரியான சான்று.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தற்போது ‘ஜிகர்தண்டா’ படத்தை சாஜித் நட்யட்வாலா பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளார். மேலும் இந்தியிலும் கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்குவார் என தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் ‘இறைவி’ படத்தில் ஓய்வில்லாமல் இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், அந்த படத்தின் நிறைவிற்கு பிறகு இந்த படத்தை இயக்கலாம் என கூறப்படுகிறது. படத்தில் முக்கிய பாத்திரமான ‘அசால்ட் சேது’ பாத்திரத்தில் பெரிய நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தெரிகிறது.