Home நாடு 1எம்டிபி குறித்த 2 கேள்விகளை நிராகரித்தது நாடாளுமன்றம்!

1எம்டிபி குறித்த 2 கேள்விகளை நிராகரித்தது நாடாளுமன்றம்!

564
0
SHARE
Ad

rafiziகோலாலம்பூர், மே 19 – 1எம்டிபி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி எழுப்பிய இரு கேள்விகளை அனுமதிக்க நாடாளுமன்றம் மறுத்துவிட்டது.

அக்குறிப்பிட்ட இரு கேள்விகளும் 1எம்டிபி விவகாரம் குறித்து பிரதமரிடமிருந்து பதில்களைப் பெறுவதற்கான முயற்சியாக அல்லாமல், பிரதமரின் கருத்தைக் கேட்கும் முயற்சியாக உள்ளது என நாடாளுமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

1எம்டிபி வாங்கிய நிலம் குறித்து துன் மகாதீர் எழுப்பி உள்ள சர்ச்சை மற்றும் பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என மகாதீர் விடுத்துள்ள கோரிக்கை ஆகியவற்றை மையப்படுத்தி அவ்விரு கேள்விகளும் எழுப்பப்பட்டிருந்தன.

#TamilSchoolmychoice

“எனது இரு கேள்விகளையும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக ஏப்ரல் 12ஆம் தேதியே அனுப்பிவிட்டேன். ஆனால் கேள்விகளை ஏற்பதற்கில்லை என்று கூறும் மே 15ஆம் தேதியிட்ட கடிதம் கிடைத்துள்ளது.

“நாங்கள் நாடாளுமன்றத்தில் இதுநாள் வரை இதே விவகாரங்களை எழுப்பி வந்துள்ளோம். அவை குறித்துதான் துன் மகாதீர் பேசி வருகிறார். நாங்கள் கூறியவற்றையே அவரும் எதிரொலித்து வருகிறார்,” என்றார் ரஃபிசி ரம்லி.

இதற்கிடையே ACJ320 விமானத்திற்காக அரசு 28 மில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளதையும் அவர் விமர்சித்தார்.