Home நாடு 15 துண்டுகளாக வெட்டப்பட்டு குப்பையில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை!

15 துண்டுகளாக வெட்டப்பட்டு குப்பையில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை!

515
0
SHARE
Ad

Crime-Pixஜோகூர் பாரு, மே 19 – பிறந்த சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தை ஒன்று 15 துண்டுகளாக வெட்டப்பட்டு கழிவுநீர்த் தொட்டியில் வீசப்பட்டுள்ளது.

அக்குழந்தையின் வெட்டுண்ட உடல்பகுதிகள் நேற்று முன்தினம் கேம்பாஸ் பெர்மாய் அடுக்குமாடிக் குடியிருப்பின் கழிவுநீர்த் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டன.

கழிவுநீர்த் தொட்டியை சுத்திகரிக்கும் ஒப்பந்ததாரர் நேற்று முன்தினம் காலை சுமார் 10.30 மணியளவில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பைக் கூளங்களுக்கு மத்தியில் குழந்தையின் உடல் பாகங்களைக் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அந்தக் குழந்தையின் தலைப்பகுதி மட்டும் இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இத்தகைய கொடூர சம்பவம் நடந்திருப்பதை ஜோகூர்பாரு உத்தாரா காவல்துறை தலைமை உதவி ஆணையர் முகமட் கம்சானி உறுதிப்படுத்தி உள்ளார்.

“இந்தக் கொடூர சம்பவம் குறித்து காவல்துறை பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது” என்றார் முகமட் கம்சானி.