Home நாடு பாசிர் கூடாங்: தொடரும் காற்று தூய்மைக்கேடு பிரச்சனை!

பாசிர் கூடாங்: தொடரும் காற்று தூய்மைக்கேடு பிரச்சனை!

746
0
SHARE
Ad

ஜோகூர் பாரு:  நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி காரணமாக பாதிக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்துரைத்த  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், 273 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  பாசிர் கூடாங் பகுதியில் உள்ள மொத்தம் 27 பள்ளி மாணவர்கள் இதில் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுங்கை பிளந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, தாமான் நூசா டாமாய் தேசியப் பள்ளி, தாமான் செண்டானா தேசியப் பள்ளி உட்பட அதிகமான பள்ளிகளில் நேற்று இந்த காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

அவர்களில் 10 மாணவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டதாகவும், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பெர்னாமா தெரிவித்துள்ளது.