Home இந்தியா பாஜக நீர் பிரச்சனையை தீர்த்து வைக்கும், ரஜினியின் கருத்துக்கு கேலி, கிண்டல்!

பாஜக நீர் பிரச்சனையை தீர்த்து வைக்கும், ரஜினியின் கருத்துக்கு கேலி, கிண்டல்!

816
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற கணிப்பு மக்களிடத்தில் இருந்த போதிலும், மத்திய அரசுடன் திமுக இணைந்து செயல்படுமா என்பது கேள்வியாகவே தொடர்ந்து வருகிறது.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும்தர்பார்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

குடிநீர் பிரச்சனையில் இருக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள என்னுடைய இரசிகர்களை பாராட்டுகிறேன்என்று மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய போது பத்திரிக்கையாளர்களிடம் ரஜினி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விசயம் என்றும், குடிநீர் பிரச்சனையை தீர்க்க மழை நீரை சேகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

“இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை தூர்வார வேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழை நீரை சேமிக்க வேண்டும். போர்க் கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்பட வேண்டும். பாஜக அரசு இப்போது தான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை நிச்சயமாக செய்வார்கள்என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜகவுக்கு தொடர்ந்து தமது ஆதரவைத் தரும் பாணியில் ரஜினி பேசுவது மக்களிடத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. பலர் இவரது கருத்துக்கு முரண்பட்டு கருத்துகளை பதிவிட்டு வந்தாலும், பலர் நன்மை நடக்கும் போது அதனை ஏற்றுக் கொள்வோம் என்ற தொனியில் பேசி வருகின்றனர்.