கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பதுடன், வேற்றுமைகளை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
“ஒவ்வொரு தனிநபர்களும் நண்பர்கள் அல்லது எதிரிகளுடன் கலப்பதைத் தவிர்க்க முடியாது. அவ்வாறான சூழல்களில் சகிப்புத்தன்மை மிகவும் முக்கியம்.” என்று பிரதமர் கூறினார்.
நாம் சகிப்புத்தன்மையற்றவர்களாக இருந்தால், எல்லா மட்டங்களிலும் உள்ள மக்களிடன் பழகுவதும் அல்லது கடமைகளைச் செய்வதும் கடினமாகி விடும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
61 ஆண்டுகளாக ஆட்சி செய்த முந்தைய அரசாங்கத்திடம் இருந்து பொறுப்பேற்ற ஒரு வருடக் காலத்தில் பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கம் நாட்டை நிர்வகித்ததில், அரசு ஊழியர்களிடையே உள்ள உறவுகளில் பல சிக்கல்கள் இருப்பதை தாம் கண்டதாக டாக்டர் மகாதீர் கூறினார்.