Home நாடு கடும் விமர்சனங்களைத் தாண்டி குருத்துவாராவில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது!

கடும் விமர்சனங்களைத் தாண்டி குருத்துவாராவில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது!

971
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மால் நஸ்ருல்லா அவர்களின் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை ஜோகூர் பாருவிலுள்ள சீக்கிய ஆலயமான குருத்துவாராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடு குறித்து சமூகப் பக்கங்களில் பதிவிடப்பட்டதும், இஸ்லாமிய மற்றும் மலாய்க்காரர்களின் கடும் விமர்சனத்திற்கு அக்மால் ஆளானார்.

“உண்மையில் இந்த நிகழ்ச்சி அனைத்து மக்களிடமும் நல்லதொரு உறவினை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில தரப்பினரால் அது மத ரீதியாக கையாளப்பட்டுவிட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.   

“பல்வேறு மத போதகர்கள், நண்பர்கள் மற்றும் பொது மக்கள் என்னிடம் கூறிய நற்கருத்துகளை நான் பெருமனத்துடன் ஏற்கிறேன். அவற்றை எனது வாழ்க்கையின் வழிகாட்டுதல்களாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று அக்மால் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆயினும், பொறுப்பற்ற ஒரு சில தரப்பினரின் கடுஞ் சொற்களும், பேச்சுகளும் அவர்கள் யார் என்பதை பிரதிபலிப்பதாக அகமால் கூறினார்.

“இம்மாதிரியான தரப்பினரின் செயல்கள் எம்மை மேலும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை செய்ய தூண்டி உள்ளது. இனம், மத வேறுபாட்டினை களைய இம்மாதிரியான நிகழ்ச்சிகள் தேவையாக அமைகிறது ” என்று அக்மால் கூறினார்.