Home கலை உலகம் ‘சிந்துபாத்’ படம் வேறு வெளியீட்டாளருக்கு கைமாறியது!

‘சிந்துபாத்’ படம் வேறு வெளியீட்டாளருக்கு கைமாறியது!

786
0
SHARE
Ad

சென்னை: விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் படத்தை இயக்கியிருக்கிறார்.

படப்பிடிப்பை முடித்து படத்தின் விளம்பரப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கிளாப் போர்டு புரொடக்ஷன் சார்பில் சத்யமூர்த்தி கைப்பற்றியிருக்கிறார். ஏற்கனவே, இப்படமும், தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படமும் வெளிவர முடியாத சூழலைச் சந்தித்து வந்தன.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி இவர்களுடன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வன்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளனர்.