Home நாடு பிடிபிடிஎன்: வேலை இருந்தும் கடனை திருப்பிச் செலுத்தவில்லை!

பிடிபிடிஎன்: வேலை இருந்தும் கடனை திருப்பிச் செலுத்தவில்லை!

733
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில், திருப்பிச் செலுத்தப்பட்ட தேசிய உயர்க் கல்விக் கடனின் (பிடிபிடிஎன்) தொகையானது 558.9 மில்லியன் ரிங்கிட்டாகும் என பிடிபிடிஎன் தெரிவித்துள்ளது.

பிடிபிடிஎன் தகவல் தொடர்பு மேலாளர் அப்துல் காபார் யூசோப் கூறுகையில், மாதம் ஒன்றுக்கு 300 மில்லியன் ரிங்கிட் கடன் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார். ஆயினும், தற்போது சராசரியாக 150 முதல் 180 மில்லியன் வரையிலான கடன்கள் மட்டுமே திருப்பிச் செலுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

மாத வருமானத்திலிருந்து கடனை திருப்பிச் செலுத்துபவர்கள் பிரச்சனையாக இல்லை. ஆனால், வேலைக்கு சென்றும் மாதம் மாதம் கடனைச் செலுத்தாமல் நிறைய பேர் உள்ளனர்” என்று அப்துல் கூறினார்.

#TamilSchoolmychoice

ஒட்டு மொத்தமாக, திருப்பிச் செலுத்துப்படும் தொகையானது வெறும் 58 விடுக்காட்டை மட்டுமே அடைந்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.