Home தேர்தல்-14 சிங்கப்பூர் – ஜோகூர் குடிநுழைவில் இயல்பு நிலை நீடிக்கின்றது!

சிங்கப்பூர் – ஜோகூர் குடிநுழைவில் இயல்பு நிலை நீடிக்கின்றது!

1143
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – நாளை புதன்கிழமை 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சிங்கப்பூர் – ஜோகூர் பாரு குடிநுழைவு மையத்தில் மலேசியர்களின் கடப்பிதழை தானியங்கி முறையில் சோதனையிடும் கருவிகள் பழுதடைந்திருப்பதாகவும், இதனால் மலேசியர்கள் பலர் மலேசியாவிற்குள் வர இயலாமல் தவிப்பதாகவும் தகவல் ஒன்று வாட்சாப்பில் பரவியது.

இந்நிலையில், அத்தகவலில் உண்மை இல்லை என்றும், சிங்கப்பூர் – ஜோகூர் பாரு குடிநுழைவில் இயல்பு நிலையே நிலவி வருவதாகவும் ஜோகூர் குடிநுழைவு இலாகா இயக்குநர் டத்தோ ரோஹைசி பஹாரி தெரிவித்திருக்கிறார்.