Home தேர்தல்-14 தேர்தல்-14: நேரலையில் மகாதீரின் பொதுத் தேர்தல் செய்தி என்ன?

தேர்தல்-14: நேரலையில் மகாதீரின் பொதுத் தேர்தல் செய்தி என்ன?

1207
0
SHARE
Ad
லங்காவியில் மகாதீர் இன்று இரவு உரையாற்றிய காட்சி

குவா (லங்காவி) – தான் போட்டியிடும் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து நாட்டு மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு நேரலையாக வழங்கிய செய்தியில் பக்காத்தான் கூட்டணி தலைவர் துன் மகாதீர் கீழ்க்காணும் முக்கிய அம்சங்களை தனது உரையில் வழங்கினார்:

  • நாட்டின் நிர்வாகத்தை மோசமாக்கி விட்ட நஜிப் துன் ரசாக்கை நாம் நாளை நடைபெறும் பொதுத் தேர்தலில் தோற்கடித்தாக வேண்டும்.
  • நாட்டில் எல்லாவற்றையும் பணத்தைக் கொண்டு வாங்கி விட முடியும் என நஜிப் நினைக்கிறார்.
  • நாட்டின் காவல் துறை, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் போன்ற நிர்வாக மையங்களை மிக மோசமாக நஜிப் வழி நடத்தினார்.
  • ஒரு காலத்தில் ஆசியாவின் புலி என வர்ணிக்கப்பட்ட நமது நாடு இப்போது மற்ற நாடுகளால் கேவலமாகப் பார்க்கப்படுகிறது.
  • தேசிய முன்னணி அரசாங்கத்தை பொதுத் தேர்தலில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
  • மலேசியப் பெண்களிடையே சுதந்திரமும், சம உரிமைகளும் நிலைநாட்டப்படும். அனைத்து இனப் பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையாக சமமான சம்பளம் வழங்கப்படும்.
  • பெண்களுக்கான சம உரிமைகள் வழங்கப்படும். ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படும்.
  • இளைஞர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். அவர்களின் வாழ்க்கைத் தரமும், தொழில் திறனும் அதிகரிக்கப்படும்.
  • அவர்கள் கொடுக்கும் கொஞ்சம் பணத்துக்கு மயங்கி அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். அதன் பிறகு அவர்களுக்கு நிரந்தரமாக நாம் அடிமையாகும் நிலைமை ஏற்படும்.
  • எனக்கு வயதாகி விட்டது என்பதை உணர்ந்துள்ளேன். ஆனால் நாட்டை மோசமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, பல குழுக்கள் என்னை வந்து சந்தித்து நாட்டைக் காப்பாற்ற முன்வருமாறு கேட்டுக் கொண்டனர்.
  • நான் பதவியைத் தேடி அலையவில்லை.
  • நஜிப்பை மேலும் பிரதமராக நீடிக்க விட்டால், நாட்டின் பல பகுதிகளை வெளிநாட்டுக்கு விற்று விடுவார். இப்போதே நாட்டின் பல பகுதிகள் வெளிநாட்டவருக்கு உரிமையாகி விட்டன.
  • புரோட்டோன் நிறுவனத்தை விற்பனை செய்திருப்பதன் மூலம் நமது தேசியக் காரை நாம் இழந்து விட்டோம்.
  • நாட்டைக் காப்பாற்ற, பக்காத்தானுக்கு வாய்ப்பு கொடுங்கள். நாளை திரண்டு வந்து வாக்களியுங்கள்.