Home தேர்தல்-14 நஜிப் நேரலையில் கூறிய பொதுத் தேர்தல் செய்தி என்ன?

நஜிப் நேரலையில் கூறிய பொதுத் தேர்தல் செய்தி என்ன?

1129
0
SHARE
Ad

பெக்கான் – இன்று வாக்களிப்புக்கு முந்திய நாளான செவ்வாய்க்கிழமை (8 மே) இரவு 10.00 மணியளவில் தான் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானிலிருந்து நேரலையாக ஒளிபரப்பான உரையில் பராமரிப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பல்வேறு அம்சங்கள் குறித்துக் கருத்து தெரிவித்தார்.

நஜிப் உரையில் அவர் தெரிவித்த சில முக்கிய கருத்துகள் பின்வருமாறு:-

  • நான் இங்கே பேசிக் கொண்டிருக்கும் இடம் எனது தந்தையார் பலகையால் கட்டிய இரண்டு அறைகளைக் கொண்ட வீடாகும். இந்த வீடு எனக்கு பல சுகமான நினைவுகளையும், துக்ககரமான நினைவுகளையும் எப்போதும் வழங்கி வந்திருக்கின்றது.
  • இங்கிருந்து எளிமையான வாழ்க்கையைத் தொடங்கியவன்தான் நான்.
  • எனக்குத் துணையாக இருந்து பொதுத் தேர்தல் இயந்திரத்தை சிறப்பான முறையில் வழிநடத்தி வரும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தேசிய முன்னணி நாளை தேர்தலில் வெற்றி பெற்றால், 26 வயதுக்கும் குறைவான எல்லா இளைஞர்களும் வருமானவரி செலுத்துவதிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்படும். ஏற்கனவே செலுத்தியவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப வழங்கப்படும்.
  • எல்லா இனங்களிலும் யாரையும் நாங்கள் கைவிடமாட்டோம்.
  • இந்தப் பொதுத் தேர்தலில் பொய்ச் செய்திகளை நிறையக் கேட்டு மக்கள் சோர்ந்து போய் விட்டார்கள் என்பதை நான் அறிவேன்.
  • தேசிய முன்னணி வெற்றி பெற்றால் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை (மே 14 மற்றும் மே 15) இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறை வழங்கப்படும். இதன் மூலம் நோன்புப் பெருநாளுக்கான ஏற்பாடுகளை மக்கள் செய்து கொள்ள முடியும்.
  • அனைவரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு வாக்களியுங்கள்.
  • பிரிம் தொகை ஜூன் மாதத்தின் 100 விழுக்காடு உயர்த்தப்படும். ஆகஸ்ட் மாதத்திலும் மேலும் 100 விழுக்காடு உயர்த்தப்படும்.
  • இந்த ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு 5 நாட்களுக்கு நாடு முழுமையிலும் எங்கும் டோல் எனப்படும் சாலைக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது. நோன்புப் பெருநாள் தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக டோல் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும்.
  • மக்கள் மேலும் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கான உறுதி மொழியை தேசிய முன்னணி வழங்குகிறது.