Home தேர்தல்-14 தேர்தல்-14: நஜிப்பின் 3 முக்கிய அறிவிப்புகள்

தேர்தல்-14: நஜிப்பின் 3 முக்கிய அறிவிப்புகள்

1060
0
SHARE
Ad
செவ்வாய்க்கிழமை பெக்கானிலிருந்து நஜிப் உரையாற்றும் காட்சி

பெக்கான் – தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பொதுத் தேர்தலுக்கு முன்பான தனது நிறைவுப் பிரச்சாரத்தை, தான் போட்டியிடும், பகாங் மாநிலத்தின் பெக்கானில் இருந்து நேற்று இரவு நிகழ்த்தியபோது, 3 முக்கிய அறிவிப்புகளைச் செய்தார்.

1.தேசிய முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால், 26 வயதுக்கும் குறைவான எல்லா இளைய சமுதாயத்தினருக்கும் வருமானவரி செலுத்துவதிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்படும். ஏற்கனவே வரி செலுத்தியவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப வழங்கப்படும்.

2.தேசிய முன்னணி வெற்றி பெற்றால் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை (மே 14 மற்றும் மே 15) இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறை வழங்கப்படும். இதன் மூலம் நோன்புப் பெருநாளுக்கான ஏற்பாடுகளை மக்கள் செய்து கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

3.இந்த ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு 5 நாட்களுக்கு நாடு முழுமையிலும் எங்கும் டோல் எனப்படும் சாலைக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது. நோன்புப் பெருநாள் தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக டோல் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும்.

இந்த மூன்று அறிவிப்புகளுமே பொதுமக்களுக்கு மேலும் கூடுதலான பண ரீதியான சலுகைகளை வழங்கும் அறிவிப்புகளாகும்.

இவை தவிர, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வழங்கப்படவிருக்கும் பிரிம் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படவிருப்பதையும் மக்களுக்கு நஜிப் நினைவு படுத்தினார்.