Home நாடு அல்தான்துயா வழக்கு: நஜிப்பின் பதில் மேலும் சந்தேகங்களை கிளப்புகிறது – லிம் கிட் சியாங்

அல்தான்துயா வழக்கு: நஜிப்பின் பதில் மேலும் சந்தேகங்களை கிளப்புகிறது – லிம் கிட் சியாங்

594
0
SHARE
Ad

Lim Kit Siangகோலாலம்பூர், மே 19 – அல்தான் துயா கொலை குறித்து டத்தோஸ்ரீ நஜிப் அளித்துள்ள விளக்கங்கள் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என்று ஐசெக மூத்த உறுப்பினர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

“9 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அல்தான் துயா கொலை குறித்து தனது வலைப்பதிவில் அளித்துள்ள விளக்கங்கள் இது தொடர்பான சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் என்று நஜிப் நினைத்திருக்கலாம். ஆனால் உள்நோக்கத்துடன் அவர் கடைபிடித்த மௌனம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது” என்று லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

அல்தான் துயா கொலை வழக்கு தொடர்பில் எழுப்பப்பட்ட இரு கேள்விகள் அப்படியே உள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த கொலை வழக்கு முடிவுக்கு வந்ததாக நஜிப் கூறுவதை ஏற்க இயலாது என்றார்.

#TamilSchoolmychoice

“கொலை வழக்கு குறித்து மறுவிசாரணை கோருவது நியாயமற்ற செயல் என்கிறார் பிரதமர் நஜிப். ஆனால் கூட்டரசு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்த வழக்கின் முடிவல்ல என்பதே யதார்த்தம். இதை நஜிப் புரிந்துகொள்ள வேண்டும். அல்தான் துயாவை கொலை செய்ய உத்தரவிட்டது யார்? என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்,” என்று லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.

அல்தான் துயாவை கொலை செய்ய உத்தரவிட்டது யார்? கொலைக்கான நோக்கங்கள் குறித்து விசாரணை நடத்தும் விவகாரத்தில் கடந்த 9 ஆண்டுகளாக காவல்துறை, அட்டர்னி ஜெனரல், நீதித்துறை ஆகிய தரப்புகள் உள்நோக்கத்துடன் மௌனம் காத்தனவா? என்ற இரு கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும் என்றார் கிட்
சியாங்.

“இது தொடர்பாக அரசு விசாரணை ஆணையம் தேவையா? என்பதை தீர்மானிக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்க வேண்டும். கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அல்தான் துயா குடும்பத்திற்கும், தண்டனை விதிக்கப்பட்ட இருவருக்கும் நீதி வழங்கப்பட்டிருப்பதாக நஜிப் கூறியது தவறு.

“இந்த தீர்ப்பின் வழி தங்களுக்கு நீதி வழங்கப்பட்டதா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் வெளிப்படையாக தெரிவிக்க நஜிப் உரிய ஏற்பாடுகள் செய்ய தயாரா?” என்று கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.