‘ட்ரிபிள் எக்ஸ்’ எனப்படும் ஆபாசப் படங்களில் நடித்தவர். அந்தப் படங்களை சொந்தமாக இணையதளம் தொடங்கி அதில் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறவர்.
சன்னி லியோன் 2012 -இல் இந்தி சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்து வருகிறார். ஜன்ஜக்ருதி சமிதி என்ற இந்து அமைப்பு சன்னிலியோன் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது.
தனது ஆபாச இணையதளத்தால் இளம் வயதினரிடம் காம உணர்ச்சிகளை தூண்டி விடுகிறார். கலாச்சாரத்தை சீரழிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். எனவே சன்னிலியோனை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.