Home உலகம் தடையை மீறி ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி – முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்பு!

தடையை மீறி ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி – முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்பு!

521
0
SHARE
Ad

Mullaitivu Meetingகொழும்பு, மே 19 – இலங்கை ராணுவம் – விடுதலைப் புலிகளுக்கு இடையே நடந்த இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு 6-ஆம்  ஆண்டு நினைவஞ்சலி நேற்று முதல் முறையாக இலங்கையில் வெளிப்படையாகச் செலுத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான தமிழர்களுடன், வடக்கு மாகாண  முதல்வர் விக்னேஷ்வரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் காலத்தில், முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி  செலுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  புதிய அதிபராக சிறீசேனா பதவி ஏற்றவுடன், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு  முதல் முறையாக வெளிப்படையாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்டப்போர்  முல்லைத்தீவில் உள்ள  வெள்ள முள்ளிவாய்க்காலில் மே 18-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

முள்ளிவாய்காலில்  நிகழ்த்தப்பட்ட குண்டுகள் தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடலும் இங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் 6-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.

vickneshvaranஇந்த இடத்தில் அஞ்சலிக் கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என்று நீதிமன்றமும், போலீசாரும்  உத்தரவிட்டிருந்த நிலையிலும் நேற்று முதல்வர் விக்னேஷ்வரன் தலைமையில் போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் நூற்றுக்கும்மேற்பட்ட தமிழர்கள் கையில் மெழுவர்த்தி ஏந்தி தாங்கள் இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, விடுதலைப்புலிகளை நினைவுகூறும் வகையில் எந்த வகையிலும் கூட்டமோ, ஊர்வலமோ நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று போலீசார் கடுமையாக  எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நினைவஞ்சலி தீபத்தை ஏற்றிவைத்த பின்பு, முதல்வர் விக்னேஷ்வரன் பேசியதாவது; “முள்ளிவாய்க்காலில் அரசியல்  ரீதியாக கூட்டம் கூட்ட மட்டுமே நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது அஞ்சலிக்கூட்டம். நம் மக்களிடையே முள்ளிவாய்க்கால் படுகொலை, அழிக்க முடியாத வடுவை ஏற்படுத்தியுள்ளது”.

vickneshvaran,“தடை செய்யப்பட்ட ஆயுதங்களால் அப்பாவி மக்கள்  மீது இலங்கை ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்தனர்.”

“குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கொதுக் கொத்தாக பலியானார்கள்.  அப்போது ஊடகத்திற்கும், மனித உரிமை அமைப்பிற்கும் அனுமதியில்லை,  சாட்சிகள் இல்லாத போராக முடிந்தது”.

“தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் அதிகார தீர்வுக்காக, இலங்கை அரசு, அனைத்துலக சமூகத்துடன் இணைந்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும்”.

“இலங்கையில் தற்போது மலர்ந்துள்ள சாதகமான அரசியல் சூழ்நிலை மாறுவதற்கு முன்பாக, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்திற்கு தீர்வு காணப்பட  வேண்டும்” என்றார்.