Home கலை உலகம் டுவிட்டரில் 1 மில்லியன் ரசிகர்களை பெற்றார் சிவகார்த்திகேயன்!

டுவிட்டரில் 1 மில்லியன் ரசிகர்களை பெற்றார் சிவகார்த்திகேயன்!

515
0
SHARE
Ad

sivakarthikeyan,சென்னை, மே 19 – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் கதாநாயகனாக 6 படங்களே நடித்திருந்தாலும், பெரிய நடிகர்களின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பும், ரசிகர்கள் பட்டாளமும் இவருக்கு படுவேகத்தில் உயர்ந்து வருகிறது.

இவர் தனக்கென்று சொந்தமாக டுவிட்டர் பக்கம் ஒன்று வைத்துள்ளார். அதில் நிறைய ரசிகர்கள் இவரை தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவருடைய இந்த டுவிட்டர் பக்கத்தை தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தொட்டுள்ளது.

sivakarthikeyanஏற்கெனவே, தமிழ் சினிமா நடிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், சித்தார்த், தனுஷ் ஆகியோர்தான் டுவிட்டர் பக்கத்தில் 1 மில்லியனை தொட்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

1 மில்லியன் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுவிட்ட சிவகார்த்திகேயன், 1 மில்லியன் நண்பர்களால் என்னை மில்லியனராக மாற்றிய உங்களுக்கு நன்றி என்று அந்த பக்கத்தில் கருத்தும் தெரிவித்துள்ளார். இவருடைய நடிப்பில் ‘ரஜினி முருகன்’ படம் விரைவில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.