ரியாத், பிப்.21- இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரை அந்நாடு திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டு ஒரு குழந்தையை கொலை செய்த வழக்கில் இலங்கையை சேர்ந்த ரிஜானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம் சவுதிக்கான இலங்கை தூதரை இலங்கை வாபஸ் பெற்றது.
இதனை தொடர்ந்து இலங்கைக்கான தூதரை சவுதி திரும்ப பெற்றுள்ளது என சவுதி வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இதனடிப்படையில், இலங்கைக்கான சவுதி தூதர், கொழும்புவிலிருந்து கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.