Home இந்தியா ரத்த அழுத்தம் அதிகரிப்பு: சிறையில் சோர்வுடன் காணப்பட்டாரா ஜெயலலிதா?

ரத்த அழுத்தம் அதிகரிப்பு: சிறையில் சோர்வுடன் காணப்பட்டாரா ஜெயலலிதா?

493
0
SHARE
Ad

Jayalalitha_AFP2பெங்களூர், அக்டோபர் 2 – சிறையில் உள்ள ஜெயலலிதா கடந்த 2 நாட்களாக சோர்வுடன் காணப்படுவதாகவும், ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும், தன்னை பார்க்க வரும் யாரையும் சந்திக்காமல் தவிர்த்து வருவதாகவும் சிறை வட்டாரம் மூலம் செய்தி வந்துள்ளாது.

அவருடன் சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோருடனும் அவர் பேசுவதை தவிர்த்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிக்காமல்,

வழக்கமான அமர்வுக்கு மாற்றம் செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு தகவல் கேட்டு ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும், உடனடியாக சிறை வளாகத்தில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு  சிகிச்சை அளித்த பின் குணமாகியதாக தெரிய வருகிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2 நாட்களாக அவர் சரியாக உணவு எடுத்து கொள்ளாமல் தவிர்த்தது ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரணை நடத்தாமல் ஒத்திவைத்ததால் அதிமுக வழக்கரிஞர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட வழக்கரிஞர்கள் நீதிமன்ற நுழைவு வாயில் எதிரில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

அவர்களை சில நிமிடங்களில் போலீசார் அப்புறப்படுத்தினர். ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு ஏற்காமல் மாற்றப்பட்டதால், உயர்நீதி மன்ற வளாகத்தில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.