Home தொழில் நுட்பம் ஜன்னல் இல்லாத தொடுதிரை விமானத்தை வடிவமைத்தது இங்கிலாந்து நிறுவனம்!

ஜன்னல் இல்லாத தொடுதிரை விமானத்தை வடிவமைத்தது இங்கிலாந்து நிறுவனம்!

602
0
SHARE
Ad

CPI-cabinலண்டன், அக்டோபர் 29 – விமானப் பயணிகளுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், ஜன்னல் இல்லாத தொடுதிரையுடன் கூடிய விமானம் முதல் முறையாக பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் பயணிகள் பறக்கும் விமானத்தில் இருந்து நேரடியாக வெளியுலக காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்.

பிரிட்டனைச் சேர்ந்த புத்தாக்க செயல்முறை மையம் (Center for Process Innovation), விமானத்தில் வழக்கமாக இருக்கும் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைந்த தொடுதிரைகளை பொருத்த முடிவு செய்தது. இதன் மூலம் விமானத்தின் எரிபொருள் செலவு மிச்சமாவதுடன், விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு புதிய அனுபவமாகவும் இருக்கும். தற்போது இந்த ஆய்வு செயல்வடிவம் பெற்றுள்ளது.

இந்த புதிய விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள திரைகளின் வெளிப்புறத்தில் திறன்மிக்க கேமராக்கள் உள்ளன.

#TamilSchoolmychoice

மேலும், அதனுடன் ஆர்கானிக் ஒளி உமிழ் டயோடு தொழில் நுட்பமும் செயல்படுத்தப்பட்டுள்ளதால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், வான்வெளியில் என்ன நடக்கிறது என்பதை இந்த திரையின் மூலம் நேரடியாக பார்த்து ரசிக்க முடியும்.

விரைவில் பரிசோதனைக்கு வர இருக்கும் இந்த விமானம், வர்த்தக ரீதியாக செயல்பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகின்றது.