Home உலகம் மலேசியா-துபாய் இணைந்து செயல்பட வேண்டும் – நஜிப்

மலேசியா-துபாய் இணைந்து செயல்பட வேண்டும் – நஜிப்

501
0
SHARE
Ad

Najib-Malaysia-Flagகோலாலம்பூர், அக்டோபர் 29 – வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் மலேசியா, துபாயுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் உலக இஸ்லாமிய பொருளாதார மையத்துடன் இணைத்துக் கொள்ள முடியும் என  பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக இஸ்லாமிய பொருளாதார மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலந்தாய்வின் போது பிரதமர் நஜிப் கூறியுள்ளதாவது:-

துபாய் அரசுடன் இணைந்து செயல்படுவது சாத்தியமான ஒன்றுதான்.  இது தொடர்பான முக்கிய ஆய்வுகள் பல்வேறு நிலைகளில்  நடத்தப்பட்ட வருகின்றது. துபாயுடன் இணைந்து செயல்படுவது மலேசியப் பொருளாதாரத்திற்கு மிகச் சரியான வாய்ப்பாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், வளர்ந்து வரும் மலேசியப் பொருளாதாரம் துபாய் அரசுக்கு கடும் போட்டி அளிக்கின்றதா என்ற கேள்விக்கு  பிரதமர் நஜிப் பதில் அளிக்கையில், “மலேசியப் பொருளாதாரத்தை மற்ற இஸ்லாமிய பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில்கடந்த 6 மாதங்களில் மட்டும் இரட்டிப்பாகி உள்ளது. எனினும் போட்டி என்பதை விட, இணைந்து செயல்பட வேண்டும் என்பதே மலேசியாவின் நோக்கமாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.