Home உலகம் வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்!

வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்!

634
0
SHARE
Ad

vietnam-prime-minister-nguyen-tan-dung

பெய்ஜிங், அக்டோபர் 29 – இந்தியா-வியட்நாம் இடையே நேற்று ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்தியாவின் தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் சீனா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா, சீனாவிற்கு பதில் அளித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் வியட்நாம் பிரதமர் நிக்யூன் டான் டங் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். பேச்சுவார்த்தையின் முடிவில், இருநாடுகளின் உறவினை பலப்படுத்தும் விதமாக வியட்நாம் அருகே எண்ணெய் வள ஆய்வுக்கு ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு, வியட்நாமின் கடற்பாதுகாப்பிற்கான போர்க்கப்பல்கள் வழங்குதல், இயற்கை எரிவாயு உற்பத்தி  உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்ற முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

#TamilSchoolmychoice

எனினும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கிய ஒப்பந்தங்களுக்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் சீனக் கடல் பகுதிகளில் இந்தியா எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த எதிர்ப்பு குறித்து இந்திய அரசு கூறியுள்ளதாவது:-

“இந்தியாவின் தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் சீனா தலையிடுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. வியட்நாமுடனான உறவு இந்தியாவின் தனிப்பட்ட நடவடிக்கை” என்று கூறியுள்ளது.

இலங்கையில் சீனாவின் ஆதிகத்திற்கு பதிலடி தரும் விதமாகவே, இந்தியா வியட்நாம் அரசை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. சமீப காலமாக சீனா, இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் விதமாக, சீனா தனது போர்க்கப்பல்களை இலங்கையில் நிலை நிறுத்தி வருகின்றது.

இந்நிலையில், வியட்நாமுடன் இந்தியா கடல் பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளதால், இந்தியப் போர்க்கப்பல்கள் இனி தென் சீனக் கடல் பரப்பில் நிலை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே சீனா, வியட்நாமுடனான இந்திய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.