Home உலகம் விண்வெளிக்கு புறப்பட்ட நாசா ராக்கெட் வெடித்து சிதறியது!

விண்வெளிக்கு புறப்பட்ட நாசா ராக்கெட் வெடித்து சிதறியது!

520
0
SHARE
Ad

B1ETzneIUAES0I0-800x474வாஷிங்டன், அக்டோபர் 29  இன்று அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்ட அமெரிக்க ராக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.

அறிவியல் சோதனைக்கான உபகரணங்களோடு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, 5,055 பவுண்ட்ஸ் எடை கொண்ட அமெரிக்காவின் பெயரிடப்படாத சரக்கு ராக்கெட் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

கிழக்கு வெர்ஜினியாவில் உள்ள நாசா ஏவு தளத்திலிருந்து இன்று காலை 6.22 மணிக்கு கிளம்பிய அந்த ராக்கெட், புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிழம்புகளுடன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

#TamilSchoolmychoice