Home உலகம் நியூயார்க்கில் தனியாக நடந்து செல்லும் பெண்ணுக்கு ஏற்படும் கதி என்ன? (காணொளியுடன்)

நியூயார்க்கில் தனியாக நடந்து செல்லும் பெண்ணுக்கு ஏற்படும் கதி என்ன? (காணொளியுடன்)

575
0
SHARE
Ad

Newyorkநியூயார்க், அக்டோபர் 31 – உலகம் நவீனத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாலும் ஆண்களிடையே, பெண்கள் மீதான கண்ணோட்டத்தில் இன்னும் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு சான்றாக சமூக ஊடகமான யூ-ட்யூப்பில் “10 Hours of Walking in NYC as a Woman” என்ற பெயரில் காணொளி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டு அதிவேகமாக பரவி வருகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்யப்பட அந்த காணொளியில், அமெரிக்காவின் முக்கிய நகரமான மன்ஹாட்டனில் இளம்பெண் ஒருவர் நடைபாதையில் சுற்றி வருகிறார். அப்பொழுது, வழியில் தென்படும் ஆண்கள் பலர் அவளை விமர்சனம் செய்தபடியே இருக்கின்றனர். யாரிடமும் பேசாமல் அந்த பெண், நகரத்தின் பல்வேறு இடங்களை சுற்றி வருகிறார். அவள் சுற்றி வரும் இடங்களில் இருக்கும் பெரும்பாலான ஆண்கள், அவளை வர்ணிக்கும் படியான வார்த்தைகளை அவளிடம் தெரிவிக்கின்றனர்.

சுமார் 2 நிமிடம் ஓடக் கூடிய இந்த கணொளியின் இறுதியில், மன்ஹாட்டனில் சுமார் 10 மணிநேர நடை பயணத்தில், 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் அப்பெண்ணை தவறான வார்த்தைகளால் வர்ணனைகளை செய்துள்ளனர். இந்த நிலை மாற, பெண் துன்புறுத்தல்களைத் தடுக்க போராடும் ‘ஹோல்லாபேக்’ (Hollaback) நிறுவனத்திற்கு ஆதரவு அளியுங்கள் என்ற வாசகங்களுடன் முடிகின்றது.

#TamilSchoolmychoice

விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த காணொளியில் ஷோஷனா பி. ராபர்ட்ஸ் என்ற நடிகை நடித்து இருந்தார். மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளதால், நடிகையிடம் தவறான வார்த்தைகளை தெரிவித்த ஆண்களின் முகங்கள் தெளிவற்றதாகவே காட்டப்பட்டிருந்தது.

இந்த காணொளி பற்றி  ஷோஷனா பி. ராபர்ட்ஸ் கூறுகையில், “விழிப்புணர்வு நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இந்த காணொளி மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 9.8 மில்லியன் பயனர்கள் அந்த காணொளியைப் பார்வையிட்டுள்ளனர்.  அவர்களில் பெரும்பாலானோர் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும் ஒரு சிலர் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்

பெண்  துன்புறுத்தல்களைத் தடுக்க போராடும் ஹோல்லாபேக் என்ற இலாப நோக்கமற்ற நிறுவனம் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் காணொளியைக் கீழே காண்க: