Home கலை உலகம் நடிகர் கார்த்திக் சொத்து தகராறு தொடர்பாக போலீசில் புகார்!

நடிகர் கார்த்திக் சொத்து தகராறு தொடர்பாக போலீசில் புகார்!

586
0
SHARE
Ad

karthik4-600சென்னை, அக்டோபர் 31 – இயக்குநர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்திக் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவரது மகன் கவுதம் கார்த்திக்கும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் இடங்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார்த்திக் திடீர் என வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் தனியாக தங்கி இருப்பதாக தெரிகிறது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் கார்த்திக் நேற்று இரவு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் சொத்து தகராறு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்ட போது சொத்து விவகாரம் தொடர்பாக கார்த்திக் அளித்த புகார் குறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறினர்.